கொழும்பு மாவட்டத்தில் மொட்டு வேட்பாளருக்கு அசிட் தாக்குதல்!

பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும், மொரட்டுவ நகரசபை மேயர் சமன்லால் பெர்னாண்டோ இன்று (02)
அசிட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

அவர் காரில் செல்லும் போது, அசிட் தாக்குதல் நடத்தப்பட்டது எனினும், அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மொரட்டுவ பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் கலந்த கொண்டபோது இந்த சம்பவம் நடந்தது.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.