மாத்திரையுடன் கலந்து பொதி செய்யப்பட்டு விற்கப்படும் போதைப்பொருள் – அவதானம் மக்களே

அம்பாறையில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிந்தவூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருள் பொதி செய்யப்படுவதாக நேற்றிரவு சம்மாந்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கை காரணமாக போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் ஐவர் சிக்கியுள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் 25 வயது முதல் 30 வயதுடையவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

இதேவேளை சந்தேகநபர்கள் பொதி செய்து கொண்டிருந்த சுமார் 1 கிராமிற்கு அதிகமான போதைப்பொருள் பக்கெட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த போதைப்பொருள் பனடோல் மாத்திரையுடன் கலந்து பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகநபர்களை இன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.