கொழும்பில் பிரபல ஹோட்டலில் பெண்ணொருவர் வாங்கிய சமோசாவுக்குள் மெல்லும் பசை (chewing gum)

கொழும்பு – சின்னமன் ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய சமோசாவுக்குள் மெல்லும் பசை (chewing gum) இருந்துள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் சமூகவலைத்தளம் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வீடியோ ஒன்றினை எடுத்து அதை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

சமோசாவை வாங்கிய பெண் ஒருவரின் மகள் இதை சாப்பிட்டுள்ளார்.

இதன்போது வித்தியாசமான பொருள் ஒன்று உள்ளே இருப்பதை அவதானித்த தாயார் அதை பார்த்த போது அதில் chewing gum இருந்துள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.