பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த யுவதியை காப்பாற்றும் நோக்கில் ஆற்றில் குதித்த இளைஞரை காணவில்லை!

பண்டாரகமை – பாணந்துறை வீதியில் பொல்கொட பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த யுவதியை காப்பாற்றும் நோக்கில் ஆற்றில் குதித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் ஆற்றில் குதித்த யுவதியை பிரதேசவாசிகள் காப்பாற்றி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பண்டாரகமை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான இளைஞனே யுவதியை காப்பாற்றும் நோக்கில் ஆற்றில் குதித்து காணாமல் போயுள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 11 மணயளவில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் சுழியோடிகள் காணாமல் போன இளைஞனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.