இன்று 9 பேருக்கு தொற்று உறுதி!

நாட்டில் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,880 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒன்பது பேர் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஐந்து பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு திரும்பியவர்கள். மூன்று பேர் இந்தோனேசியாவிலிருந்து திரும்பியவர்கள். ஒருவர் சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பியவர்.

தற்போது, 247 தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்..

கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,622 ஆக உயர்ந்தது.

வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 49 நபர்களும் கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளானவர்களில் 952 பேர் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள். கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளிடையே பரவிய வைரசால், 950 பேர் பாதிக்கப்பட்டனர்.