வவுனியா செட்டிகுளம் பகுதியிலிருந்து மயிரிழையில் தப்பித்த பயணிகள்!

இன்று காலை செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.சாலைக்கு சொந்தமான பேருந்து பூவரசன்குளம் பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை ஏன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சென்ற இ.போ.ச. சாலை பேருந்து பூவரசன்குளம், சண்முகபுரம் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று இயந்திரக்கோளாறு ஏற்பட்டு வீதியைவிட்டு விலகியுள்ளது.

இதன்போது வீதியோரத்தில் மேய்ந்துகொண்டிருந்த இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் அதிஸ்டவசமாக உயிராபத்து ஏற்படவில்லை.

வவுனியாவிலிருந்து சென்ற இ.போ.ச பேருந்தில் பயணிகள் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளதாக பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.