தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் பாலசுப்பிரமணியம் புகைப்படம் வெளிவந்தது, எல்லோரையும் கண் கலங்க வைத்த போட்டோ, இதோ

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை.

அந்த அளவிற்கு பேர் புகழை கொண்ட இவருக்கு கடந்த வாரம் கொரொனா தொற்று ஏற்பட்டது, இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகினர்.

ஆனால், அவரே லைவில் வந்து பேசியது பலருக்கும் கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்தது.

தற்போது இவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலைய எட்டியதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டது.

அதை தொடர்ந்து அவரை தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றினார்கள், அதை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் இவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இவர் தம்ஸ் அப் காட்டுவது போன்ற புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது, அவர் மீண்டு வந்து பழைய பலத்துடன் பாட வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்…