வெகுமதிகளை எதிர்பார்த்து அமைதியாக காலத்தை காத்திருக்க வேண்டும் – முன்னாள் ஜனாதிபதியின் பேஸ்புக் பதிவு

பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பு ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று (13) பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன 111,137 விருப்பு வாக்குகளை பெற்று பொலன்னறுவை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றார்.

´சலன மிக்க ஒரு சவாலை வெற்றிகரமாக முடித்த பின்னர் வெகுமதிகளை எதிர்பார்த்து அமைதியாக காலத்தை காத்திருக்க வேண்டும்´ என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.