உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்பு பட்டதான குற்றச்சாட்டு பின்னணியே மைத்திரிக்கு பதவி கிடைக்காமைக்கு காரணம்?

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்பு பட்டதான குற்றச்சாட்டு பின்னணியே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதவி வழங்கப்படாமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுகிறது.

துணைப் பிரதமர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கொடுக்க ஒருபோதும் அரச உயர்பீடம் தீர்மானிக்கவில்லை என்று ஜனாதிபதி, பிரதமருடன் நெருக்கமாகவுள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கூடிய பின்னர் துணைப் பிரதமர் என்கிற ஒரு பதவியை ஏற்படுத்தி அதனை மைத்திரிபால சிறிசேனவுக்கு கொடுக்க அரச தரப்பு தீர்மானித்திருக்கின்றது எனத் தகவல்கள் ஏற்கனவே வெளியாகிவந்தன.

இதற்காகவே தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியையும் முன்னாள் ஜனாதிபதி சிறிசேன வேண்டாம் என்று கூறியிருந்தார்.

எனினும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகார விசாரணையில் மைத்திரியின் பெயர் இருப்பதாலும், அவருக்கு எதிராகப் பாரதூர குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாலும் துணைப் பிரதமர் என்கின்ற பதவியை வழங்குவதை அரச உயர்பீடம் தவிர்க்க முடிவெடுத்திருகின்றது எனத் தற்போது புதுத்தகவல் வெளிவந்துள்ளது.