முள்ளிவாய்க்காலில் உறுதியுரையேற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

புதிய நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தமது அரசியல் பயணத்தை முள்ளிவாய்க்கால் மண்ணிலிருந்து ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ள அவர்கள், அங்கு சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளனர்.

இதன்போது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வருகை தந்த மக்கள் கூட்டத்தை விட அதிகளவான மக்கள் பிற பிரதேசங்களிலிருந்து பேருந்துகளில் அழைத்துவரப்பட்டுள்ளனர்.