தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 30,274பேர் தனிமைப்படுத்தலில்!

முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 30,274பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது 41 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 4689பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் இன்று, 160பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்புவார்கள் எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 886 பேராக பதிவாகியுள்ளது.

இதேவேளை இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 209பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்தோடு கொரோனா தொற்று சந்தேகத்தில் 55 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.