அரசியல் கட்சி தொடங்குகிறாரா நடிகர் விஜய்? உண்மை என்ன?

இளைய தளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்கலாம் என கூறப்படுகிறது.

நீண்ட காலமாகவே விஜய் அரசியலுக்கு வரவிருப்பதாக பேச்சுகள் இருந்து வருகிறது, இதற்கு அடித்தளமாக அவர் நடிக்கும் படங்களிலும் அரசியல் வசனங்கள் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் டெல்லி வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது கட்சியை பதிவு செய்யும் பணிகளை திறம்பட செய்யும் வழக்கறிஞரை சந்தித்து பேசியுள்ளார்.

கொரோனா காலத்தில் வழக்கறிஞரை அவசரமாக சந்தித்து பேசியிருப்பதால், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட கட்சி உருவாகலாம் என தெரிகிறது.

இதே வழக்கறிஞரை தான் ரஜினி முதலில் சந்தித்ததாகவும், பின்னர் வேறொரு வழக்கறிஞரிடம் ஆலோசனை கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.