தனி வழியில் ராஜபக்சாக்கள் – பின்னணியில் நடப்பது என்ன?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆட்சியமைத்திருக்கிறார்கள் ராஜபக்ச அணியினர். புதிய வழியில், புதிய முறையில் ஆனால் பழைய பாணியில் ஆட்சியமைத்திருக்கிறார்கள் அவர்கள். தங்கள் சிங்கள பௌத்த மன்னர்களின் அதே வழியில் பௌத்தத்தை முதன்மைப்படுத்தி நகரத் தொடங்கியிருக்கிறார்கள்.

யுத்த வெற்றியின் மூலமாக தங்களை ஸ்ரீலங்காவின் காவலர்களாக உயர்த்திக் கொண்ட ராஜபக்ச தரப்பினர் அதன் பின்னர் குறுகிய காலத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ரணில் வகுத்த வியூகத்திற்குள் அகப்பட்ட அவர்கள் மைத்திரிபால சிறிசேனவினால் வீழ்த்தப்பட்டனர்.

எனினும், யாரால் வீழ்த்தப்பட்டார்களோ அவர்களாலேயே தங்கள் இருப்பை உயர்த்திக் கொண்டார்கள். மைத்திரி – ரணிலுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளும், சந்திரிகாவின் பிடியிலிருந்து மைத்திரி விடுபட்டதும் பெரும் திருப்பு முனையாக அமைய, ரணிலிடமிருந்து விலகினார் மைத்திரி. மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார்.

Advertisement