பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்றாயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று!

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட மூன்றாயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமாகி வரும் நிலையில், தற்போது பிரித்தானியாவிலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,988-ஆக பதிவாகியுள்ளது.

கடந்த மே மாதத்திற்கு பின்னர் நாட்டில் கொரோனாவின் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும், இதன் மூலம் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,551-ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் கடந்த மே மாதம் 23-ஆம் திகதிக்கு பிறகு இன்று மிகப் பெரிய எண்ணிக்கையை தொட்டுள்ளது.

ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸில் புதிய இறப்புகள் எதுவும் இல்லை. இதில் ஸ்காட்லாந்தில் 208 பேருக்கு புதிதாகவும், வடக்கு அயர்லாந்தில் 106 பேருக்கு புதிதாகவும் மற்றும் வேல்ஸில் 98 பேருக்கு புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினசரி தொற்றுநோய்களின் எண்ணிக்கை 1,000-ஆக உயர்ந்தது. பின்னர் தொடர்ந்து இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 1,940 பேருக்கும், வியாழக்கிழமை 1,735 மற்றும் புதன்கிழமை 1,508 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

ஒரு ஆய்வாளர் சமீபத்திய பேட்டி ஒன்றில், கொரோனா வைரஸ் 2023 வரை நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கக்கூடும் என்றும், பயனுள்ள தடுப்பூசி கிடைத்தாலும், நாம் இதை மறந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றுநோய்க்கு பதிலளித்த ஒரு முக்கிய ஜேர்மன் வைராலஜிஸ்ட் பேராசிரியர் Hendrik Streeck, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா வழக்கமான வெடிப்புகளை உலகம் காணும் என்று கணித்துள்ளார்.

இந்த வைரஸ் மறைந்துவிடவில்லை. அது இப்போது நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இது இன்னும் மூன்று ஆண்டுகள் இங்கே இருக்கும், அதனுடன் வாழ ஒரு வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.