சிஎஸ்கே-வின் அடுத்தக் கேப்டன் யார்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தக் கேப்டன் குறித்து சிஎஸ்கே வீரர் பிராவோ தகவல் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை பத்து சீசன்களிலும் சென்னை அணியை டோனி கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

டோனியின் தலைமையில் சென்னை அணி பத்து ஐபிஎல் சீசன்களில் எட்டு இறுதிப் போட்டிகளில் விளையாடி மூன்று கோப்பைகளை வென்றுள்ளது.

Advertisement

ஆகஸ்ட் 15ம் தேதியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சிஎஸ்கே கேப்டன் டோனி, இப்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார், அவர் எல்லா வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வுபெறும் போது யாரை கேப்டன் ஆக்குவது என்பது பற்றி ஏற்கனவே யோசிக்கத் தொடங்கியுள்ளார்.

அடுத்த சிஎஸ்கே கேப்டன் யார் என்பதை தீர்மானிப்பது ஏற்கனவே டோனியின் மனதில் சில காலமாக உள்ளது என்பதை சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

சிஎஸ்கேவின் அடுத்த தலைமை குறித்து டோனியின் மனதில் நிச்சயம் முடிவு இருக்கும். எல்லாருமே ஒருநாள் விலகும் நேரம் வரும். அப்படி விலகும் நேரம் டோனி தன்னுடைய பொறுப்பை ரெய்னாவுக்கோ அல்லது இளம் வீரர் ஒருவரிடமோ ஒப்படைப்பார் என பிராவோ தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கேவின் ரசிகர்கள் தான் அணிக்கு பக்கபலம். அவர்களின் தொடர் ஊக்கம் தான் அணியின் வெற்றிக்கு காரணமாக உள்ளது என பிராவோ தெரிவித்துள்ளார்.

டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் அவர் அணியை வழிநடத்தும் பாணியில் எந்த மாற்றமும் இருக்காது, நிச்சயமாக அவர் அதே நபராக தான் இருப்பார் என பிராவோ குறிப்பிட்டுள்ளார்.