ராகிங் கொடுமையால் மூடப்பட்டது பேராதனை பல்கலை பொறியியல் பீடம்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான அனைத்து துறைகளும் மோசமான ராகிங் சம்பவத்தால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களில் ராகிங் நிகழ்வைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக அதிகாரிகள் கடுமையாக்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு மாணவர்கள் இரண்டாம் ஆண்டு பொறியியல் பீட மாணவர்களால் மோசமான மறையில் ராகிங் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது, அவர்கள் தற்போது பல்கலைக்கழகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் உபுல் பி.திஸநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் ராகிங்கைத் தடுக்கும் வகையில் புலனாய்வுப் பிரிவின் உதவியும் கோரப்பட்டுள்ளது.