முகமாலை பகுதியில் மனித கால் எலும்பு துண்டுகள் மற்றும் சில பொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் சீருடைகள், கால் பகுதி எலும்பு துண்டுகள், பற்றிகள் என்பன மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களால் இவை அடையாளம் காணப்பட்டு பளை பொலிசாருக்கு நேற்று புதன்கிழமை தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.