யாழ் அரியாலை கடற்பரப்பில் நாட்டப்பட்டிருந்த பனை குற்றிகள் அகற்றல்!

யாழ்ப்பாணம் – அரியாலை தொடக்கம் கோவிலாக்கண்டி வரையான கடற்பரப்பில் நாட்டப்பட்டிருந்த பனை குற்றிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பின்பேரில் இன்று அகற்றப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் இராணுவத்தினரால் பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த கடற் பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பனைக் குற்றிகள் நாட்டப்பட்டன.

அவை இதுவரை அகற்றப்படாத நிலையில் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைளுக்கு அவை பாரிய இடையூறாக இருந்தன.

Advertisement

இந்தநிலையில், அண்மையில் ஆய்வுப்பணிகளுக்காக குறித்த பிரதேசத்திற்கு சென்ற களப்பு அபிவிருத்தி திட்ட அதிகாரிகளின் ஆலோசைனைக்கு அமைய அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இராணுவத்தினரால் குறித்த பனைக் குற்றிகள் அகற்றப்பட்டுள்ளன.