யாழ். பல்கலைக்கழ பகிடிவதை விவகாரத்தில் நான்கு மாணவர்கள் இடைநிறுத்தம்!

யாழ். பல்கலைக்கழத்தில் பகிடிவதையில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளது.

அத்துடன் பல்கலைக்கழகத்தின் புதுமுக மாணவர்கள் மீது ‘பகிடிவதை’ மேற்கொள்ளப்பட்டால் சிரேஸ்ட மாணவர்கள் ஈவிரக்கமின்றித் தண்டிக்கப்படுவார்கள் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஸ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட இணைய பகிடிவதை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement