மாரடைப்பால் மரணமடைந்த சின்னத்திரை நடிகர்!

பிரபல சின்னத்திரை நடிகர் சபரிநாத் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

மலையாள சின்னத்திரை உலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சபரிநாத்.

தேசிய அளவிலான பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்றுள்ள சபரிநாத் நேற்று அந்த விளையாட்டை விளையாடி கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சபரிநாத் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

43 வயதே ஆன சபரிநாத் திடீரென உயிரிழந்தது சக நடிகர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சபரிநாத்துக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.