யாழ் கடல் ஆமையை இறைச்சியாக்கி விற்றவர் கைது!

யாழ்.குருநகர் பகுதியில் கடலாமையை பிடித்து இறைச்சியாக்கி விற்பனை செய்த ஒருவர் அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளார்.

குருநகர், அண்ணா சிலையடியில் இன்று காலை இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கடல் ஆமைகளைப் பிடித்து இறைச்சியாக்கி அவற்றை பங்குகளாகப் பொதி செய்து விற்பனை செய்து வந்தவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 4 கடல் ஆமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்பைக்கப்படுவார் என்று சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

Advertisement