கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் கண்காணிக்கப்பட்டவர்களில் 24 பேருக்கு கொரோனா!

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகைதந்த 257 பேர் கடந்த ஆகஸ்ட்மாதம் 02 ஆம் திகதி கேப்பாபிலவு விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கான பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டம் கட்டமாக வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட போதும் இதுவரை 24 பேருக்க கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் கொரோன மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்கள்.

இன்னிலையில் 19.09.2020 அன்று 8 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 10 பேர் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement