யாழில் பிரபல ரௌடி தனுரொக் உள்ளிட்ட 9 ரௌடிகள் கைது!

யாழ்ப்பாணத்தில் பிரபல ரௌடி தனுரொக் உள்ளிட்ட 9 ரௌடிகளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆவா குழுவில் இருந்து பிரிந்த ரௌடிகள், தனுரொக் குழுவினர் என்ற பெயரில் போட்டி ரௌடிக்குழுவாக செயற்பட்டு வருகிறார்கள்.

தனியார் வங்கியொன்றின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞர்களை விசேட அதிரடிப்படையினர் விசாரணை செய்தபோது, அவர்கள் பயங்கர ரௌடிகள் என்பது தெரிய வந்தது.

Advertisement

தனுரொக் குழுவின் தலைவனிற்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. மிரட்டல், கப்பம் கோரல் உள்ளிட்ட வழக்குகள் அவை.

கைதான ரௌடிகள் மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.