யாழில் பட்டப்பகலில் பாடசாலை உடைத்து கொள்ளை!

 யாழ்.அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் கதவுகளை உடைத்து பெருமளவு பொருட்கள் திருடப்பட்டிருக்கின்றது.

பாடசாலையின் இரவு நேரக் காவலாளி நேற்று மாலை கடமைக்கு வந்தபோது அதிபர் அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ரூபா ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்