யாழில் போதைப்பொருளுடன் 18 வயது இளம் பெண்ணொருவர் கைது!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் 185mg ஹேரோயின் போதைப்பொருளுடன் அதே இடத்தைச் சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இன்று (21) மதியம் 02.00 மணியளவில் மதுவரி திணைக்கள அதிகாரிகளிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த நபர் யாழ் கொழும்புத்துறை பகுதியில் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த வேளையில் மதுவரித் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

மதுவரி உதவி ஆணையாளர் வடமாகாணம் பிரபாத் ஜெயவிக்கிரவின் வழிநடத்தலின் கீழ் யாழ்ப்பாண மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான
சக மதுவரிபரிசோதகர் V.ரசிகரன் மற்றும்V.அனுஷன்,T. வாசுகி ஆகியோர் கொண்ட குழுவினரால் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்மைய நாட்களில் யாழ்ப்பாண குடாநாட்டில் பல்வேறு இடங்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் முப்படையினர் மற்றும் மதுவரித் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.