யாழ் தென்மராட்சி பகுதியில் கடுங் காற்றுக் காரணமாக மதில் இடிந்து வீழ்ந்தது!

யாழ்.தென்மராட்சி – பகுதியில் இன்று(21) பிற்பகலில் வீசிய கடுங் காற்றுக் காரணமாக மதில் இடிந்து வீழ்ந்துள்ளதோடு கட்டடத்தின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

தென்மராட்சி தனங்களப்பு – முனியப்பர் வீதியிலுள்ள வீட்டைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த 80 அடி நீளமான மதில் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதேவேளை, சாவகச்சேரி நகரில் தனங்களப்பு வீதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தின் கூரைத் தகரங்கள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன

Advertisement