பஸ்ஸில் இருந்து விழுந்த குழந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!

அக்கராயன்குளத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ்ஸில் இருந்து வீழ்ந்த குழந்தை ஒன்று தலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பஸ் வாசலுக்கு அருகில் குழந்தையுடன் அதன் தாயார் அமர்ந்திருந்த நிலையில் சாவகச்சேரி பகுதியில் பஸ் பயனித்த போது, வீதியின் குறுக்கே மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றதால் சாரதி திடீரென பஸ்ஸை நிறுத்தியுள்ளார்.

இதன்போது தாய் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட குழந்தை வீதியில் விழுந்துள்ளது.

Advertisement

இதனையடுத்து காயமடைந்த குழந்தை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ் போதனாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.