யாழில் 45 கிலோ ஆமை இறைச்சியுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் 45 கிலோ ஆமை இறைச்சியுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

காவல்துறை சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 45 கிலோ ஆமை இறைச்சி, மூன்று ஆமைகளின் எலும்புகள், ஆமைகளை வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கத்தி, ஒரு கோடரி என்பன பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement