ஜெர்மனியில் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட 94 தமிழர்களிற்கு கொரோனா!

ஜெர்மனியின் பீலவில்ட் நகரில் தமிழ் குடும்பமொன்றின் பூப்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட, 94 தமிழர்கள் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 22 ஆம் திகதி பூம்புனித நீராட்டுவிழா நடைபெற்றது. கலந்து கொண்ட இலங்கைத் தமிழர்கள் 94 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது அந்நாட்டு சுகாதாரப் பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுமாறு அந்த நாட்டு சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

Previous articleவடக்கு, கிழக்கு அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய துறைகள் முடங்கின!
Next articleதூங்கிக் கொண்டிருந்தபோது ஓடு கழற்றி பெற்றோல் ஊற்றி எரித்த காதலன் – காதலி பரிதாப மரணம்