சாலை விபத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியான தாய்,மற்றும் மூன்று பிள்ளைகள்!

பிரித்தானியாவில் ஆக்ஸ்போர்டு அருகே சாலை விபத்தில் சிக்கி தாயார் மற்றும் மூன்று பிள்ளைகள் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ஸ்போர்டு அருகே A40 சாலையில் இத்துயர சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் பலியான 29 வயது ஸோ பவல் என்பவரின் கணவர், 30 வயது ஜோஷ் மற்றும் இவர்களின் 18 மாத குழந்தை ஒன்றும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த Thames Valley பொலிசார், நேற்றிரவு ரயில்வே ஓவர் பிரிட்ஜ் அருகே ஜோஷ் மற்றும் ஸோ குடும்பத்தினர் சென்ற வாகனமானது லொறி ஒன்றுடன் மோதியதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதில் லொறி சாரதி லேசான காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது.

விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்ட பலரும், ஜோஷ் குடும்பத்தினர் சென்ற வாகனமானது அப்பளம் போல நொறுங்கிக் கிடந்ததாக தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மரணமடைந்த ஸோ இளம் பெற்றோருக்கான கட்டுரைகள் உள்ளிட்டவைகளை எழுதி வந்துள்ளார்.

இவர்கள் குடியிருந்த வீட்டு தீக்கிரையான நிலையில் சமீபத்தில் இப்பகுதிக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.

திங்களன்று இரவு சுமார் 9.50 மணிக்கு நடந்த இந்த கோர விபத்தில் ஸோ உடன், அவரது 8 வயது மற்றும் 4 வயதுடைய இரு மகள்கள், 6 வயது மகனும் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர்.