பல்கலைகழக மருத்துவ பீடங்களில் PCR பரிசோதனைகள்!

பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக பல்கலைகழக மருத்துவ பீடங்களின் ஒத்துழைப்மை வழங்குமாறு சுகாதார அமைச்சு பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார அமைச்சின் செலாளரினால் இது தொடர்பில் நேற்று (14) எழுத்து மூலமாக கோரிக்கை விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படைய அனைத்து பல்கலைகழக துணைவேந்தர்களும் அதற்கு சார்ப்பாக பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

அதனடிப்படையில் ஶ்ரீஜவர்தனபுர, காலி, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பேராதெனிய பல்கலைகழகங்களில் இந்த நடவடிக்கையை விரைவில் ஆரம்பிப்பதாவும் அவர் தெரிவித்துள்ளார்.