15 வயது சிறுவனை வீட்டில் வைத்து உல்லாசம் அனுபவித்த 27 வயது ஆசிரியை – இலங்கையில் சம்பவம்

மாத்தறை – வெலிகமையில் 15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் 27 வயதுடைய பிரத்தியேக வகுப்பு ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒக்டோபர் 6ம் திகதி ஆசிரியையின் வீட்டில் படிக்க சென்ற குறித்த சிறுவன், பின்னர் வகுப்புக்கு செல்ல மறுத்துள்ளான். எனினும் சில நாட்களில் ஆசிரியையும் சிறுவனும் வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவர் சிறுவனை கொழும்பு, கண்டி ஹோட்டல்களுக்கு அழைத்து சென்றதாகவும் தெரியவருகிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த 12ம் திகதி இருவரையும் அழைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு, சிறுவனின் வாக்குமூலத்தின்படி ஆசிரியை கைது செய்தனர்.