யாழில் இளம்குடும்பத் தலைவரின் மோட்டார் சைக்கி ளை அடித்துதூக்கிய டிப்பர் – சம்பவஇடத்திலே பலியான நபர்

மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதில் கருனாரட்ணம் கருனானந்தன் (36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோப்பாய் சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Advertisement

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த குடும்பஸ்தர் உயர்ந்துள்ளார்.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.