ஒரே மாதத்தில் 10 கிலோ குறைக்க வேண்டுமா? இந்த ஒரு பொருள் போதுமே!

உடல் எடையை ஒரே மாதத்தில் 10 கிலோ வரை குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு காண்போம்.

கீரை வகையைச் சேர்ந்தது ருபார்ப். இதன் இலைகள் உடல் எடையை குறைப்பதுடன் ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கும். இந்த கீரையானது ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.

ருபார்ப் கீரை

இந்த கீரையில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், இயற்கை அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. ஊட்டச்சத்துக்களில் நார்ச்சத்து, புரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் கே, பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஆகும்.

Advertisement

இந்த கீரையின் இலைகளில் கொழுப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும். எனவே இது ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், இதயத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்கும்.

உடல் எடை குறைப்பு

ருபார்ப் கீரையில் மிகக் குறைவான அளவு கலோரிகள் உள்ளன. எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது பெரிதும் உதவும். 100 கிராம் ருபார்ப் இலைகளில் வெறும் 21 கலோரிகளே உள்ளது.

இதில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். அத்துடன் உடலில் உள்ள கொழுப்புக்களை பெருமளவு குறைக்கும். இதன்மூலம் ஒரே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்.

ருபார்ப் கீரையின் இதர பலன்கள்

ருபார்ப் இலைகளில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் பிற பாலிபினோலிக் கலவைகளான லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, கண் மற்றும் சருமத்தை கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கும்.

அத்துடன் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் முன்கூட்டியே வயதாவது, சுருக்கங்கள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளையும் சரி செய்கிறது. மேலும் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படாமலும் இந்த இலைகள் உதவும்.

எலும்புகளுக்கு வலிமை

எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டவர்கள் ருபார்ப் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள வைட்டமின் கே மற்றும் கால்சியம் ஆகியவை எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் முறிந்த எலும்புகளை விரைவில் குணமடைய செய்கிறது.

அல்சைமர்

ருபார்ப்பில் உள்ள வைட்டமின் கே மூளையின் செயல்திறன் மற்றும் நரம்பு மண்டல பிரச்சனைகளை சரிசெய்யும். இந்த கீரையின் இலையானது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் செல்களை அழிப்பதுடன், புலனுணர்வு செயலையும் தூண்டுகிறது. எனவே நியாபக மறதி மற்றும் அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

செரிமானம்

இந்த கீரை செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலை ருபார்ப் கீரை சரிசெய்வதுடன் குடல் இயக்கங்களை சீராகவும், மென்மையாகவும் மாற்றுகிறது. எனவே இதனை உணவில் சேர்த்து வருவதன் மூலம் குடல் வீக்கம், குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

இதய பாதுகாப்பு

ருபார்ப் இலைகளில் கொழுப்புகள் மிகக் குறைவாக உள்ளது. எனவே இதனால் இதயத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்த நாளங்கள் மற்றும் தமனிகளில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடண்டகள் இதயத்திற்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகின்றன.