இலங்கையில் சமூகப்பரவலாக உருவெடுக்கும் கொரோனா – முழு நாட்டிற்கும் ஆபத்து ஏற்படலாம் என எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக வைரஸ் வேகமாக பரவி வரும் 5 மாவட்டங்கள் தொடர்பாக அரசாங்கம் துரிதமாக தீரமானத்தை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதான தொகுப்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

Advertisement

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, குருணாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்த மாவட்டங்களின் ஊடாக நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருக்கிறது.

இந்த மாவட்டங்களின் எல்லைகள் தொடர்பாக உடனடியாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த தீர்மானத்தை தொடர்ந்தும் ஒத்திவைத்தால், பேலியகொடையில் ஏற்பட்ட கொத்தணி போல் நாடு முழுவதும் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.