வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை!

மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில் விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுவதால் நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றதாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.

வருகின்ற 2 தினங்களில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் இரத்தம் முடிவடையவுள்ளமையினால் அவசரமாக குருதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

Advertisement

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கி சேவை ஓரளவிற்கு திருப்திகரமாக காணப்படுகின்றது. எனினும் சில குருதி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது.

அதனை நிவர்த்தி செய்வதற்கு பொது மக்கள் முன்வரவேண்டும். எனினும் மக்களிடையே இரத்ததானம் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டினார்.

மேலும் இரத்ததானம் தொடர்பான விளக்கத்தினை பொதுமக்களுக்கு ஊடகங்களே வழங்க முன்வரவேண்டும்.

மேலதிக தகவல்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியூடாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 18 – 60 வயதுக்குட்பட்ட 50 கிலோகிராம் நிறையுடைய ஆரோக்கிமான நிலையிலுள்ள சுகதேகி ஒருவரால் இரத்ததானம் செய்து கொள்ள முடியும் என்பதை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளார்.