யாழ், வவுனியா, கண்டி, கொழும்பு மக்கள் வீடுகளிற்கு வெளியில் கடுமையான வேலை செய்ய வேண்டாம் என எச்சரிகை!

கடந்த சில நாட்களில் இலங்கையில் வளி மாசு மட்டத்தின் அளவு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் எதிர்பாராத அளவிலான காற்று மாசுபாடு அதிகரிப்பு நாட்டின் பல பாகங்களில் பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் பல பகுதிகளில் காற்றின் மாசு அதிகரித்துள்ளது.

Advertisement

எயார் விஷுவல் வலைத்தளத்தின்படி, இந்திய துணைக் கண்டத்தின் மேல் மாசடைந்த வளி, இலங்கை வளிமண்டலத்திற்குள் நுழைவதனாலேயே இவ்வாறு வளி மாசு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று வடிவங்களில் ஏற்பட்ட மாற்றம், இந்திய துணைக்கண்டத்தின் மேலான மாசடைந்த வளியை இலங்கைக்கு நகர்த்தியுள்ளது.

இந்த பகுதிகளிலுள்ள காற்றின் தரம், குழந்தைகள், வயதானவர்கள், கருத்தரித்த பெண்கள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆரோக்கியமற்றது. எனவே, முகமூக்கவசம் அணியவும், வெளியில் கடுமையான வேலைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.