கரவெட்டியில் 97 குடும்பங்கள் தனிமப்படுத்தப்பட்டனர்!

கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் கரவெட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் கொரோனா தொற்று உள்ள ஒருவர் இனம்காணப்பட்டதையடுத்து கரவெட்டி வடக்கு (J/364), கரவெட்டி மேற்கு (J/363) கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 56 வீடுகளில் 97 குடும்பங்களை சேர்ந்த 277பேர் பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 30 வீடுகளில் உள்ள 52 குடும்பங்களை சேர்ந்த 151 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரவெட்டி மேற்கில் 6 குடும்பங்களும் கரவெட்டி வடக்கில் 42 குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement