கிளிநொச்சியி விடுதலைப் புலிகளின் முகாமில் கொரொனா வைத்தியசாலை!

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் (விடுதலைப்புலிகளின் நவம் அறிவு
கூடம் கட்டடதொகுதி) அமைக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைத்தியசாலைகளின்
பணிகளை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நேரில்
சென்று பார்வையிட்டுள்ளார்.

இன்று (31) மாலை 4.30 மணியளவில் கிளிநொச்சி கொரோனா
வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதி மிக வேகமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா சிகிச்சை நிலையத்தின் பணிகளை
பார்வையிட்டுள்ளதோடு, நிலைமைகள் தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி
சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவனிடம்
கேட்டறிந்து கொண்டார்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஒப்பந்தகாரர்களை கொண்டு இன்னும் இரண்டு வார
காலத்திற்குள் பணிகளை நிறைவு செய்து கொரோனா வைத்தியசாலையின்
செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வகையில் பணிகள் மிக வேகமாக
முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement