வவுனியாவில் பெண்ணுக்கு கதைகூட என்பதால் மாப்பிள்ளை வீட்டுக்காரர் வீட்டைப்பூட்டிவிட்டு ஓடி விட்டார்களாம்!

வவுனியாவில் பெண்ணுக்கு கதைகூட என்பதால் மாப்பிள்ளை வீட்டுக்காரர் வீட்டைப்பூட்டிவிட்டு ஓடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவை சேர்ந்த 26 வயது பெண்ணொருவருக்கும் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த 29-வயது இளைஞன் ஒருவருக்கும் தரகர் ஊடாக திருமணம் பேசப்பட்டு கிளிநொச்சியில் உள்ள ஆலயமொன்றில் குறித்த பெண் உட்பட்ட பெண் வீட்டாரும், இளைஞன் உட்பட்ட இளைஞன் வீட்டாரும் சந்தித்து பேசிய பின்னர் இருவருக்கும் பிடித்துப்போக சில தினங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு சம்மந்தக்கலப்பிற்கு (நிச்சயதார்த்தம்) வருமாறு மாப்பிள்ளை வீட்டார் அழைப்புவிடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து பெண்ணும் குறித்த இளைஞனும் தொலைபேசி இலக்கங்களையும் பரிமாறிக்கொண்டதுடன் பேசவும் ஆரம்பித்து விட்டனர்.

Advertisement

இந்த நேரத்தில்தான் அந்த பெண்ணை முன்பு அறிந்திருந்த இளைஞனின் நண்பன் ஒருவர் அந்த பெண்ணை புகைப்படத்தில் பார்த்திருக்கிறார், அப்போது இவளையா திருமணம் செய்யப்போகிறாய், இவள் ஒரு வாயாடி, திமிரு பிடித்தவள் என பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி திருமணம் செய்யவிருந்த இளைஞனை மனமாற வைத்துவிட்டார் அவரின் நண்பன்.

தொடர்ந்து திருமணம் செய்யவிருந்த இளைஞன் தனது குடும்பத்தில் நடந்ததை சொல்லி இந்த சம்மந்தக்கலப்பை நிறுத்துமாறு கூறியிருக்கிறார். அதற்கு குடும்பத்தினர் இதை எப்படியாடா அவர்களுக்கு சொல்வதென கேட்க, எனக்கு பிடிக்கவில்லை இத்தோடு இந்த கதையை நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.

இதை பெண் வீட்டாரிடம் சொல்ல தயங்கிய குறித்த இளைஞனின் பெற்றோர், பெண் வீட்டார் நாளைக்கு பத்துமணிக்கு வருகிறோம் என கூற, ஓம் வாங்கோ என கூறிவிட்டு மறுநாள் அவர்கள் வருவதற்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு மகனின் நண்பனின் வீட்டில் போய் குடும்பத்துடன் தங்கி விட்டனர்.

பெரும் எதிர்பார்ப்புடன் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற பெண்ணுக்கும் பெண் வீட்டாரும் அதிர்ச்சிகலந்த ஏமாற்றத்துடன் வவுனியா திரும்பியுள்ளனர், பின்புதான் தெரிந்தது இவர்கள் திட்டமிட்டு செய்த வேலை.

இந்த உலகில் இருக்கின்ற ஒவ்வொரு உயிரினத்திற்கும் உணர்வுகள் இருக்கின்றன அந்தவகையில் ஒரு பெண்ணுக்கு எவ்வளவு உணர்வுகள், ஆசைகள் இருக்கும், திருமணம் தொடர்பில் பேசுவதற்க்கு முன்பே ஆண் தொடர்பிலோ, பெண் தொடர்பிலோ விசாரித்து முடித்தபின் திருமண சம்பிரதாயங்களை தொடங்குங்கள்.

திருமணம் தொடர்பிலான சம்பிரதாயங்களை தொடங்கிய பின் பெண்ணாக இருந்தாலும் சரி ஆண் ஆக இருந்தாலும் சரி யாரும் சொல்வதை கேட்டு அடுத்தவர்களின் உணர்வுகளில், இதயங்களில் காயங்களை ஏற்படுத்தாதீர்கள்.