சுவிஸில் ஒரே நாளில் 10,000-க்கும் மேற்பட்டோரை தாக்கிய கொரேனா!

சுவிட்சர்லாந்தில் ஒரே நாளில் 10,073 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா தடுப்பூசி உருவாக்க உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல நாடுகளில் கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலை அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

சுவிசர்லாந்தில் கொரோனா தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை சுவிஸ் சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 10,073 புதிய கொரோனா தொற்றுகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 73 இறப்புகள் பதிவாகியுள்ளது. இதனால், சுவிட்சர்லாந்து மற்றும் சிறிய அண்டை நாடான Liechtenstein-ல் மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் எண்ணிக்கை 1,92,376 ஆக அதிகரித்துள்ளது, இறப்பு எண்ணிக்கை 2,275 ஆக அதிகரித்துள்ளது.