சக வீரரின் மனைவியை திருமணம் செய்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர் குறித்து தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

கிரிக்கெட் உலகில் முன்னணி வீரர்களாக திகழும் சிலர் ஏற்கனவே திருமணமான பெண்களை மணந்துள்ளனர்.

உபுல் தரங்கா (இலங்கை)
இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கா நிலங்கா என்ற பெண்ணை மணந்தார்.

நிலங்காவுக்கு இது இரண்டாவது திருமணமாகும், அவரின் முதல் கணவர் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் திலகரத்னே தில்ஷன் ஆவார்.

Advertisement

தரங்காவும், நிலங்காவும் நெருங்கி பழக ஆரம்பித்த காரணத்தாலேயே அவரை தில்ஷன் விவாகரத்து செய்தார் என கூறப்படுவது உண்டு. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.

முரளி விஜய் (இந்தியா)
இந்திய அணி வீரர் முரளி விஜய்க்கு சக வீரர் தினேஷ் கார்த்திகின் மனைவி நிகிதா மீது காதல் வந்தது.

இதையடுத்து தினேஷ் கார்த்திக்கை பிரிந்த நிகிதா முரளி விஜய்யை திருமணம் செய்து கொண்டார்.

இதன்பின்னர் தினேஷ் கார்த்திக் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல்லை மணந்தார்.

அனில் கும்ப்ளே (இந்தியா)
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் அனில் கும்ப்ளே சேட்டனா என்ற பெண்ணை மணந்தார்.

சேட்டனா பங்கு தரகர் ஒருவரின் மனைவி ஆவார். கணவரை பிரிந்த சேட்டனா கும்ப்ளேவை மணந்து கொண்டார்.

ஷிகர் தவான் (இந்தியா)
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் தவான் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஆயிஷா முகர்ஜியுடன் காதல் வயப்பட்டார்.

இதையடுத்து கணவரை பிரிந்திருந்த ஆயிஷாவை தவான் திருமணம் செய்து கொண்டார்.