ஒரு இலட்சம் காணித்துண்டு வழங்கும் அரசின் செயற்பாட்டில் முண்டியடித்த வடக்கின் இளைஞர்கள்!

ஒரு இலட்சம் காணித்துண்டு வழங்கும் அரசின் செயற்பாட்டில் பயனாளிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

காணித்துண்டு விவகாரத்தில் தமிழ் பகுதிகளில் அவ்வளவாக அக்கறை காண்பிக்கப்படாத நிலை ஆரம்பத்தில் காண்பிக்கப்பட்ட போதும், கடந்த இரண்டு நாட்களில் அதிக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இன்று வடக்கின் பல பகுதிகளிலும் பிரதேச செயலகங்களில் விண்ணப்ப படிவங்களை வழங்க பலர் முண்டியத்தனர்.

Advertisement

தமது விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டமைக்கான எந்தவொரு சான்று படிவங்களும் வழங்கப்படவில்லை என விண்ணப்பதாரிகள் விசனம்.

அரச தொழில் முயற்சி காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சினால் இளந்தொழில் முயற்சியாளருக்கு ஒரு லட்சம் ஏக்கர் காணித்துண்டுகளை வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

அதற்கமைவாக பலரும் தொடர்ச்சியாக விண்ணப்பித்து வருகின்ற நிலையில்,

நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் பிரதேச செயலக காணி கிளையில் கையளிக்கப்பட்டபோது அதனைப் பெற்றுக்கொண்டதற்கான எந்தவொரு சான்று படிவங்களும் வழங்கப்படவில்லை என்பதால், இச் செயற்திடத்தில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக விண்ணப்பதாரிகள் விசனம் தெரிவித்தனர்.