சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் கொரோனா: தாக்குதலுக்குள்ளாகும் மருத்துவமனை ஊழியர்கள்

சுவிட்சர்லாந்தில் ஒரு பக்கம் கொரோனா அதிகரித்துக்கொண்டே செல்ல, மறு பக்கம் மருத்துவமனை ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

சுவிட்சர்லாந்தில், கடந்த வார இறுதியில் மட்டும் 17,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 536பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 169 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுவிட்சர்லாந்திலேயே அதிகம் பாதிக்கப்படுள்ள மாகாணம் ஜெனீவாதான். அங்கு 100,000 பேருக்கு 2,700 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஜெனீவாவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி Fribourg, அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 100,000 பேருக்கு 2,500 பேர்.

Advertisement

பொதுவாக, நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், மருத்துவமனை ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாட்டின் மேற்கு பகுதியில் அதிகமாக தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாக, சுவிஸ் பத்திரிகை ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஜெனீவாவைப் பொருத்தவரை, மருத்துவமனை ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் இரு மடங்கு அதிகரித்துள்ளன.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்கள் உறவினர்களுக்கு, மருத்துவமனை ஊழியர்கள் வேகமாக சிகிச்சையளிப்பதில்லை என்று கருதுவோர்தான் வன்முறையில் இறங்குவதாக தெரியவந்துள்ளது.