சுவிட்சர்லாந்தில் குளியலறையில் இறந்துகிடந்த பிரித்தானிய இளம்பெண்

பிரித்தானிய இளம்பெண் ஒருவர் சுவிட்சர்லாந்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் குளியலறையில் இறந்து கிடந்த வழக்கு உலகின் கவனம் ஈர்த்தது.

Anna Florence Reed (22) என்ற அந்த பெண்ணின் மரணம் தலைப்புச் செய்தியாவதற்கு காரணம், அவர், தன் காதலரான Marc Schatzle (29) என்ற ஜேர்மன் நாட்டவருடன் பாலியல் விளையாட்டு ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மூச்சுத்திணறி இறந்துபோனார் என்று வெளியான தகவல்தான்.

Annaவின் மரணத்தைத் தொடர்ந்து, சட்டத்துறை நிபுணரான அமெரிக்க நீதிபதி Eugene Hyman, கழுத்தை நெறிப்பது போன்ற செயல்பாடுகள் கொண்ட இந்த வகை விளையாட்டுகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

Advertisement

இப்படி உலகம் முழுவதையும் தன் பக்கம் இழுத்த Annaவின் வழக்கில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Anna உயிரிழந்த Ticinoவிலுள்ள La Palma au Lac என்ற ஹொட்டலின் லிப்ட் ஒன்றில், Annaவின் கிரெடிட் கார்டு மறைத்துவைக்கப்பட்டிருந்ததை பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

Anna மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அதனால், இதுவரை பாலியல் விளையாட்டில் இறந்ததாக கருதப்படும் Anna, பணத்துக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என இப்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Picture: Facebook
ஏற்கனவே, Anna இறப்பதற்கு முந்தைய தினம், அவரது அறையிலிருந்து வாக்குவாதம் செய்யும் சத்தம் பயங்கரமாக கேட்டதாகவும், பக்கத்து அறையிலுள்ளவர்கள், போர்ட்டர் ஒருவரை அனுப்பி Annaவையும் Marcஐயும் அமைதியாக இருக்கும்படி கூறச் சொன்னதாகவும் அந்த ஹொட்டலில் பணிபுரியும் ஊழியர்களும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Marc சூரிச்சில் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சட்டத்தரணிகள் கவனக்குறைவால் மரணம் நிகழ்ந்ததாக வாதத்தை முன்வைத்துள்ள நிலையில், இப்போது வழக்கே தலைகீழாக மாறிவிட்டதால், இனி Marc நிலைமை சிக்கல்தான் என எதிர்பார்க்கப்படுகிறது.