உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன்கள்

மேஷம்: அசுவினி: நேற்றிருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.
பரணி: வாயைக் கொடுத்து யாரிடமும் மாட்டிக்கொள்ள வேண்டாம்.
கார்த்திகை 1: மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்துப்போட வேண்டாம்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மனக்குழப்பம் அதிகரிக்கும். யாரிடமும் வம்பு வேண்டாம்.
ரோகிணி: கோர்ட்டில் இருந்த வழக்கு வெற்றிப்பாதை நோக்கிப் போகும்.
மிருகசீரிடம் 1,2: சிலருக்கு நீண்ட நாளாக இழுபறியில் உள்ள பிரச்னை தீரும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: குடும்பத்திலும், உள்ளத்திலும் மெல்ல அமைதி கூடும்.
திருவாதிரை: உறவினர்களிடையே இருந்த நீண்ட நாள் பிரச்னை தீரும்.
புனர்பூசம்: 1,2,3: கையிருப்பு கரையும். பொழுது போக்கில் கவனம் செல்லும்.

Advertisement

கடகம்: புனர்பூசம் 4: பிரபலமான மனிதர்களின் ஆதரவும், நட்பும் கிடைக்கும்.
பூசம்: ஒரு விஷயத்தைச் செய்யலாமா வேண்டாமா என சிந்திப்பீர்கள்.
ஆயில்யம்: உங்களுக்குத் தீங்கு நினைப்பவர் உங்களை விட்டு விலகுவர்.

சிம்மம்: மகம்: பொல்லாதவர்களின் நட்பை அடையாளம் கண்டு விலகுங்கள்.
பூரம்: நீண்டகாலம் தொடர்ந்து கொண்டிருந்த வழக்கு சாதகமாக முடியும்.
உத்திரம் 1: பெண்களின் சிக்கல் தீரும். சுபநிகழ்ச்சி பற்றிய பேச்சுகள் முடிவாகும்.

கன்னி: உத்திரம் 2,3,4: நண்பர்கள் என்று நம்பியவர்களின் செயல் ஏமாற்றமளிக்கும்.
அஸ்தம்: அக்கம் பக்கத்தினர் உங்கள் முன்னேற்றம் கண்டு வியப்பர்.
சித்திரை 1,2: பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமை அடைவீர்கள்.

துலாம்: சித்திரை 3,4: பெற்றோர் நலனில் கூடுதலான அக்கறை காட்ட வேண்டும்.
சுவாதி: புதிய வாகனங்கள் வாங்க எடுத்த முயற்சி தடைப்பட்டு நடக்கும்.
விசாகம் 1,2,3: வருமானம் திருப்தி தரும். வீட்டுத்தேவைகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்: விசாகம் 4: குழந்தைகளிடமிருந்து வரும் செய்தி மனதை மகிழ்விக்கும்.
அனுஷம்: உடன்பிறப்புகள் உங்கள் உள்ளம் அறிந்து நடந்து கொள்வர்.
கேட்டை: வருமானம் உயரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

தனுசு: மூலம்: வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். யோகமான நாள்.
பூராடம்: தாயாரின் உடல்நலம் நன்றாக இருக்கும். பணவரவு கிடைக்கும்
உத்திராடம் 1: அலுவலகத்தில் ஏற்பட்ட மாற்றம் நன்மையை தரும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: வாய்ப்புகள் வாயிற் கதவைத் தட்டும். பக்தி பெருகும்.

கும்பம்: அவிட்டம் 3,4: உடனிருப்பவர்களினால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் விலகும்.
சதயம்: குடும்பத்தினர் உங்கள் சொல்லுக்கு மதிப்புக் கொடுக்க ஆரம்பிப்பர்.
பூரட்டாதி 1,2,3: நல்லவர்களை சந்தித்து நலம் காணுவீர்கள். பழைய கடன் தீரும்.

னம்: பூரட்டாதி 4: கோயில் திருப்பணிக்காக சிறு தொகையை செலவிடுவீர்கள்.
உத்திரட்டாதி: அனுபவசாலிகளின் ஆலோசனையை ஏற்று நடப்பது நல்லது.
ரேவதி: கவனத்துடன் செய்யும் விஷயங்கள் சாதகமான பலன் தரும்.