டோனியை மேட்ச் கார்டு மூலம் எடுங்க…15 கோடியை வீணாக்காதீங்க: CSK-வுக்கு முன்னாள் வீரர் அறிவுரை

ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் சென்னை அணி நிர்வாகம் டோனியை தக்க வைக்காமல், அவரை விடுத்துவிட்டு மேட்ச் கார்டு மூலம் எடுக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு கூடுதலாக ஒரு விளையாட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா, 2021-ம் ஆண்டில் மெகா ஏலம் நடந்தால், சிஎஸ்கே அணி நிர்வாகம் டோனியை விடுவித்துவிட வேண்டும். ஏனென்றால், ஐபிஎல் மெகா ஏலத்தில் ஒரு வீரரை எடுத்தால் 3 ஆண்டுகள் வைத்து விளையாட வேண்டும்.

Advertisement

ஆனால், டோனியின் உடல்நிலையைப் பொறுத்தவரை அவரால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு விளையாடுவாரா எனத் தெரியாது. அதாவது சென்னை அணியில் டோனி 3 ஆண்டுகளுக்கு விளையாட முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

அதற்காக டோனியை அணியில் வைக்காதீர்கள் எனச் சொல்லவில்லை. அவர் 2021-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார். ஆனால், அதன்பின் விளையாடாவிட்டால், டோனியை5 கோடி ஏலத்தில் எடுத்தது போன்ற அதே மதிப்பிலான வீரர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும். அந்த மதிப்புக்கு யாரை அணி நிர்வாகம் தேர்வு செய்யும்.

ஆனால், சென்னை அணி நிர்வாகம் டோனியை விடுவித்துவிட்டு, ரைட்டூ மேட்ச் கார்டு மூலம் அணிக்குள் கொண்டுவரலாம். இதனால் அணிக்கு 15 கோடி மிச்சமாகும். இந்தப் பணத்தை வேறு இளம் வீரர்களை, நல்ல சர்வதேச வீரர்களைத் தெரிவு செய்யப் பயன்படுத்தலாம்.

ஒருவேளை டோனி 2021-ஆம் ஆண்டு மட்டும் விளையாடிவிட்டு, அதன்பின் விலகிவிட்டால் சென்னை அணிக்கு 15 கோடி திரும்பக் கிடைக்கும். ஆனால், அதே 15 கோடிக்குத் தகுதியான வீரர்கள் கிடைக்க மாட்டார்கள். மெகா ஏலத்தில் கிடைத்த வாய்ப்பு என்னவென்றால், அணி நிர்வாகத்திடம் பணம் இருந்தால், பெரிய அணியை உருவாக்க முடியும்.

இதன் காரணமாகவே டோனியை ஏலத்தில் விடுவித்துவிட்டு, மேட்ச் கார்டு முலம் மீண்டும் ஏலத்தில் சென்னை அணி நிர்வாகம் எடுக்க வேண்டும். அதுதான் அணிக்கும், நிர்வாகத்துக்கும் நல்லது என்று கூறியுள்ளார்.