கனடாவின் பிரதான தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இலங்கைத் தமிழ் பெண்

கனடாவின் பிரதான தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் இலங்கைத் தமிழ் பெண் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வருகின்றார்.

செல்வி அபி குகதாசன் (Abby Kuhathasan) அண்மையில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் உப ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் பற்றிய செய்தியொன்றின் மூலம் அனைவரினாலும் அறியப்பட்டார்.

அபி குகதாசனின் தந்தை குகதாசன் மறைந்து ஐந்தாண்டுகளைக் கடந்த நிலையில் அவர் தந்தையின் எதிர்பார்ப்பை மகள் ஈடு செய்துள்ளதாக அவரின் நெருங்கிய நண்பர்கள் கூறுகின்றார்கள்.

Advertisement

தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவரும் கனடா பத்திரிகை ஒன்றில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பூநகரான் பார்வையில் எனும் தொடரை எழுதி வந்திருந்தவர்.

கனடாவின் தொலைக்காட்சி அரசியல் கலந்துரையாடல்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்ததுடன், வாலிவதை ஒரு சமகால நோக்கு என்ற அரசியலாய்வு நூலை வெளியிட்டுள்ளார்.

யாழ் இந்துக்கல்லூரியின் கனடா கிளையின் செயலாளராக இருந்தவரும், இலங்கையில் தபால் திலணைக்களம், தொலைத்தொடர்பு பரிவரிவர்தனை நிலைய முன்னாள் பணியாளருமான அமரர் பொன்னம்பலம் குகதாசனின் மகள் அபிராமி என்பது குறிப்பிடத் தக்கது.

(அபி) அவர்கள் கனடிய தேசிய ஊடகங்களில் பணியாற்றுவது ஈழத்து இளம் தமிழ்ப்பெண் தந்தையின் ஊரான பூநகரி மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளதாக குகதாசனின் நண்பர்கள் கூறுகின்றார்கள்.