அவுஸ்திரேலியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட இந்தியப்பெண்!

அவுஸ்திரேலியாவில் இந்திய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எந்தவொரு தகவலும் இன்னும் கிடைக்காத நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.

வெஸ்ட் ஹாக்ஸ்டான் பகுதியின் புதர் காட்டில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முகம் மற்றும் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் ஒரு பெண் மீட்கப்பட்டார்.

பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Advertisement

பொலிஸார் விசாரணையில் உயிரிழந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த 39 வயதான மோனிகா ஷெட்டி என கண்டறியப்பட்டது. அவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த கொலையானது அப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஐந்து முதல் பத்து நாட்கள் வரை அவரது முகம் அமிலத்தில் முக்கி எடுக்கப்பட்டதால் அவர் பாதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பொலிசார் இந்த வழக்கு குறித்து விசாரித்ததில் எந்தவித துப்பும் கிடைக்கவில்லை.

இதுவரை எந்த முகாந்திரமும் இல்லாத இந்த வழக்கை சரியான வழியில் விசாரணை மேற்கொள்வதற்காக நியூ சவுத் வேல் அரசு இந்த வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு $500,000 சன்மானமாக கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்த வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என பொலிசார் கருதுகின்றனர்.