பிக்பாஸ் புகழ் சினேகனால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

கடந்த 16ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் பாடலாசிரியர் சினேகன் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது கார் எதிரே இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.

அதில் பயணம் செய்த அருண்பாண்டி என்பவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு போரூரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அருண் பாண்டியன் உயிரிழந்தார்.

Advertisement

இதனால் கவிஞர் சினேகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.